காதலை உச்சரிக்கும்போதே உள்ளத்திற்குள் குளிரடிக்கும். ஒரு பெண் பழகுவது நட்பு என்று புரியாமல் காதல் என்று தவறாகப் புரிந்து கொண்டு வாழும் சராசரி மனிதனின் குமுறல் ஒருபுறம் என்றால் அவனது அண்ணன் அந்த பெண்ணை திருமணம் செய்த பிறகு தான் அவளுக்கே தெரிகிறது அவள் மனதில் விரிந்த நட்பு அவன் மனதில் காதலாய் பூத்திருக்கிறதென்று.தாலி கட்டிய பிறகு தன் மனைவி தம்பியின் காதலி என்று அறிந்த அண்ணன் தனது மனைவியை அவளது காதலனாகிய தம்பியிடம் ஒப்படைக்கிறானா?... அண்ணியாய் வந்தவளை அண்ணனே அவனிடம் ஒப்படைத்த போது தம்பி ஏற்றுக் கொண்டானா...? அவளோடு சேர்ந்து வாழ்ந்தானா இல்லையா என்பது தான் இந்த நாலின் பயணம்.
இந்த நாவலில் பணக்காரர்களின் வாழ்வியலும் ஏழைகள் படும் வேதனைகளும் குறைப் பிரசவத்தில் பிறந்த குழந்தையை தனக்கு பிறந்தவன் அல்ல என்று வாதிடும் மூடத்தனங்களையும் அதன் புரிதல்களும் நாவலில் நடமாடியிருக்கிறது.
வாசித்தால் நாவலை நேசிப்பீர்கள்.