"ச்க்ச்.. ச்க்ச்.. கூக்.. குக்கூ..."
பறவைகளின் சங்கீதக் குரலோசையில் கண் விழித்தாள் பவானி... இரண்டு உள்ளங்கைகளையும் சேர்த்துப் பார்த்து விட்டு படுக்கையிலிருந்து எழுந்தாள்.. அடுத்த வழக்கமாக படுக்கையறை ஜன்னலை திறந்து பார்த்தான்.. தோட்டத்தின் பசுமை அவளுக்குப் புத்துணர்வைத் தந்தது.. எப்போதும் போல ஒரு இனம் புரியாத சந்தோசமும் குதூகலமும் அவள் மனதை நிறைத்தது.. எதனால் அது என்று அவளுக்குத் தெரியவில்லை.. பெரிய தோப்புப் போல பரந்து விரிந்திருக்கும் தோட்டத்தின் மத்தியிலிருக்கும் வீட்டில் குடியிருப்பதால் அந்த சந்தோசம் வருகின்றதா..? இல்லை.. தோட்டத்தைத் தாண்டித் தெரியும் உயர்ந்த அரண்மனையின் பிரம்மாண்ட தோற்றத்தைப்...