இடைப்பட்ட இந்த எட்டு ஆண்டுகளில், சுரபி பள்ளி கல்லூரிப் படிப்புகளோடு, தொழில் நிர்வாகத்தில் எம்பிஏ வரை படித்து முடித்தாள்,
படித்த படிப்பை வீணாக்காமல், அவளுடைய அண்ணன் சுகந்தனைப் போலவே, அவர்களுடைய ஹோட்டல் தொழிலிலேயே, அவளும் சேர்ந்து பணி புரியலானாள், அதற்குள், அவளுடைய தந்தை சத்யலிங்கம் தொடங்கி நடத்திய "ஹோட்டல் அமுத"த்திற்குச் சென்னையில் பல கிளைகள் ஏற்பட்டிருந்தன, எல்லாமே, மிகவும் வெற்றிகரமாக நடந்துகொண்டும் இருந்தன, இச்சகம் பேசுவோரை நம்பாமல், குடும்பமே நேரடியாகக் கவனித்து உழைத்ததே, அந்த வெற்றிக்கு ஒரு காரணமாக இருக்கலாம், சுவை, தரம் இரண்டிலும் சத்யலிங்கம், வெகு கவனமாக இருந்தார், சைனீஸ், செட்டிநாடு, மொகல்...