கடைசியில், என்ன செய்வது, பார்க்கப் போகிறவன் அவன் தான் என்று மீராதான் விட்டுக்கொடுக்கும்படி ஆயிற்று. மனமில்லாமல்தான்.
சென்று பார்த்தால் ரவிக்கையைத் தப்பு தப்பாகத் தைத்திருந்தார்கள். இடுப்பு லொடலொட என்றிருந்தது. கையில் கை ஓரத்துப்பூ வேலை தலைகீழாக இருந்தது.
எரிச்சல் பட்டவளிடம், "நாங்கள் 'ஆர்டினரி' அளவுக்குத் தைத்துவிட்டோம். உங்கள் இடுப்பு இவ்வளவு ஒல்லியாக இருக்கும், என்று எண்ணவில்லை. எடுத்துவந்த அளவே தப்பு என்று நினைத்துப் பெரிதாகத்தைத்ததுதான் தப்பு என்று இப்போது தெரிகிறது." என்று ஐஸ் வைத்து சமாளித்தாள் அந்த தையல்கார அம்மாள்.
"இதோ, பத்தே நிமிடம்" என்று உட்காரவைத்து, கையில் பார்டரைப் பிரித்து, இடுப்பைப்...